Type Here to Get Search Results !

Translate

கர்மா எப்படி கழியும். அதேபோல் கர்மா கழிகிறதை எப்படி நாங்கள் உணர முடியும்.?

கர்மா எப்படி கழியும். அதேபோல் கர்மா  கழிகிறதை எப்படி நாங்கள் உணர முடியும்.
கர்மா
கர்மா


சற்று நிற்க..

                              ராயரே...
  கர்மா எப்படி கழியும் அதேபோல் கர்மா
      கழிகிறதை எப்படி நாங்கள் உணர
                             முடியும்.?

                 இதற்கு ராயரின் பதில்.!

 விசித்திரமான கேள்வி உங்களுடையது
                              நண்பரே..

   இருந்தாலும் எனது பாணியில் பதில் 
                         சொல்கிறேன்.!

     தெரியாத தொழிலை செய்து அதன் 
               மூலமாக கடன் ஏற்பட்டு 
         கடன்காரனாக ஓடி ஒளிவது..!

        உங்களுக்கு சம்பந்தமே இல்லாத 
           பிரச்சினையில் நீங்கள் சிக்கி
 அடிதடி வம்பு வழக்குகோர்ட் கேஸ் என்று 
                சிக்கி அழுது புலம்புவது.!

     மனைவி மீது அளவுகடந்த பிரியம் 
         இருந்தும் மனைவியை இழந்து 
அல்லது மனைவியை பிரிந்து வாழ்வது

உங்களின் குழந்தைகள் இழப்பு அல்லது குழந்தைகள் பிரிவு போன்ற சம்பவங்கள் 
                              நடப்பது..

          தாய் தந்தையை திடீரென்று 
                    அடுத்தது இழப்பது.!

     தீராத ஊழ்வினை நோய் உங்களை 
தாக்கி குணப்படுத்த முடியாமல் நீங்கள் 
                     அழுது புலம்புவது.!

நீங்கள் பிறந்ததில் இருந்தே எந்தவொரு 
     சுகத்தையும் அனுபவிக்க முடியாமல் 
     உங்களின் அன்றாட வாழ்க்கையை 
          நினைத்து அழுது புலம்புவது.!

       அரசியலில் வேட்பாளராக நின்று 
    தோல்வியை தழுவி அதன் மூலமாக 
       பணம் இழப்பு ஏற்பட்டு உங்களை 
   தோற்கடித்த மக்களை கண்டபடி பேசி
                     அழுது புலம்புவது.!

              செய்யாத குற்றத்திற்காக
காவல்துறைஅதிகாரியிடம்உதைவாங்க ி
            அழுது புலம்புவது அல்லது 
               சிறைச்சாலை செல்வது.! 

      (.அதேபோல் திடீரென்று உங்கள் 
                  வீட்டிற்க்கோ அல்லது 
   உங்கள் அலுவலகத்திற்க்கோ லஞ்ச
    ஒழிப்பு துறை வருமானவரித்துறை
                   வருகை தந்து ரெய்டு
      நடத்தி உங்கள் மீது வழக்கு பதிவு 
                              செய்வது.)

(.ஓ..அடக்கடவுளே இது அரசியல் கருத்து 
             அல்ல தயவுசெய்து என்னை
                             மன்னிக்க.)

         இப்படி நீங்கள் செய்யாத செய்த 
    தவறுகளுக்கு எல்லாம் உங்களுக்கு 
                 கிடைத்த தண்டனையை
 நினைத்து ஒவ்வொருநாளும்உங்களின்

              மனசு நடந்ததை நினைத்து 
     நினைத்து நீங்கள் ரத்தக் கண்ணீர் 
           வடிக்கிற ஒவ்வொரு நாளுமே
     உங்களின் கர்மா கழிந்து கொண்டு 
            இருக்கிறது என்று அர்த்தம்.!
               
         இப்படி ஏதேனும் ஒரு கர்மாவின்
            பிடியில் நீங்கள் சிக்கி அழுது 
      புலம்பி தப்பித்தோம் பிழைத்தோம்

                என்று நீங்கள் அனைத்து
       பிரச்சினைகளிலிருந்து நீங்கள் 
                மீண்டு வந்துவிட்டீர்கள்
                               என்றால்..

                       உங்களின் கர்மா
       கழிந்துவிட்டது என்பதை நீங்கள் 
         அனுபவ பூர்வமாக உணரலாம்.!
              
    அதேபோல் கர்மாவை வழிநடத்துகிற
           தலைவர்..வேறு யாருமில்லை
                    சனி பகவானேதான்..!

        டானுக்கு எல்லாம் டானால்லவா
                       நம்ம சனி பகவான்.!
                       
                             

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad