Type Here to Get Search Results !

Translate

தொழில் விருத்தி ஏற்பட மந்திரம் ?

தொழில் விருத்தி ஏற்பட மந்திரம்

தொழில் விருத்தி ஏற்பட மந்திரம்

கீழே கொடுக்கப்பட்டுள்ள மந்திரம் கடை மற்றும் வியாபார ஸ்தலத்திற்கு நாலா திசைகளில் இருந்தும் அதிகமான ஜனங்களை ஈர்த்து வரச்செய்யும். தன வசீகரமும் ஜன வசீகரமும் பெருகும்.
தொழில், வியாபார ஸ்தாபனங்களில் தினமும் விளக்கேற்றி இம்மந்திரம் ஜெபித்து வர தொழில் மற்றும் வியாபார விருத்தி ஏற்படும். மேலும் பணத்தைப் பெருக்கும் புத்திசாலித்தனம் உண்டாகும்.

வெள்ளிக்கிழமை மற்றும் பௌர்ணமி அன்று பச்சைக்கற்பூரம் ஏலக்காய் கலந்து காய்ச்சிய பால், வெற்றிலை, பாக்கு, பாயசம், கற்கண்டு, பழங்கள் வைத்து வழிபட விரைவான முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம்.

விளக்கேற்றி

"ஓம் ஸ்ரீம் மஹாலக்ஷ்மித் தாயே உன் முழு உருவோடும் சர்வ ஆபரணங்கள் பூண்ட கோலத்தோடும் இத்தீபத்தில் எழுந்தருளி எனக்கு வறுமை கடன் அற்ற வளமான வாழ்வு தந்தருள வேண்டும்"

என்று வேண்டி தீபத்தை வணங்கித் தலை மற்றும் கண்களில் ஒற்றிக்கொள்ளவும். தீபம் அணைந்ததும் தீபத்திரியில் உள்ள கருக்கை நெற்றியில் இட்டுக் கொள்ளவும்.இது உயர்வான பலன்களைத் தரும். மற்ற நாட்களில் முடிந்ததை நைவேத்யம் செய்து வழிபட்டு வாருங்கள். அல்லது கல்கண்டு மட்டும் படைக்கலாம்.

மந்திரம் :

ஸ்ரீ சுக்ல மகாசுக்லே நவாங்கே ஸ்ரீ மஹாலக்ஷ்மி நமோ நமஹ

இம்மந்திரம் கடை மற்றும் வியாபார ஸ்தலத்திற்கு நாலா திசைகளில் இருந்தும் அதிகமான ஜனங்களை ஈர்த்து வரச்செய்யும். தன வசீகரமும் ஜன வசீகரமும் பெருகும்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad